/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்ச்செம்மல் விருது விண்ணப்பம் வரவேற்பு
/
தமிழ்ச்செம்மல் விருது விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 06, 2025 12:25 AM
விழுப்புரம் : தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் 2025ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தில் சுய விபரக்குறிப்பு, இரண்டு போட்டோ, தமிழ் பணி, தாசில்தார் வழங்கும் இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விழுப்புரம் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

