/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ் படைப்பாளிகள் கூட்டமைப்பு கலந்தாய்வு
/
தமிழ் படைப்பாளிகள் கூட்டமைப்பு கலந்தாய்வு
ADDED : மார் 24, 2025 04:31 AM
விழுப்புரம்: தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
தமிழ் நம்பி, மோகனசுந்தரம், ஆசிரியர் ஜெயச்சந்திரன், எழுத்தாளர்கள் அன்பாதவன், ரவி கார்த்திகேயன், ஐயப்பன், ஜோதி நரசிம்மன், சாபுவி தனுஷ் உள்ளிட்டோர் கலந்தாய்வு நடத்தினர்.
இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் அரசு நடத்திய புத்தக கண்காட்சிக்கு, கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. புத்தக கண்காட்சியில் மாவட்ட படைப்பாளிகளுக்கு நேரம் ஒதுக்குவது போல், அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு நாளைக்கு ஒருவர் என வெளி மாவட்டத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் பேச, கலெக்டரும், நுாலக துறையும் பரிந்துரை செய்ய வேண்டும்.
பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கு மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களை அழைத்து உரை நிகழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.