/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு சட்டக்கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
/
அரசு சட்டக்கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி
ADDED : ஆக 08, 2025 11:43 PM

விழுப்புரம் : விழுப்புரம் அரசு சட்டக்கல்லுாரி கூட்டரங்கில், மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி சொற்பொழிவாற்றினார். இதில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பேசியதாவது;
இந்த நிகழ்ச்சி மாணவ, மாணவியருக்கு அறிவுரை மட்டுமின்றி, வழிகாட்டுதல் வழங்கக்கூடிய நிகழ்ச்சி. நவீன உலகில் தமிழ் மொழி சிறப்பு மற்றும் தமிழர்களின் மரபை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மரபு உள்ளிட்டவற்றின் தொன்மை மற்றும் பழமை குறித்து அறிந்து கொள்ள நடக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகங்களும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் பெருமிதம் குறித்து பேசிய 10 மாணவ, மாணவியருக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் புத்தகங்கம் வழங்கினார்.
அப்போது, டி.ஆர்.ஓ., அரிதாஸ், உதவி கலெக்டர் வெங்கடேஷ்வரன், திண்டிவனம் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் தங்கராஜன், அரசு சட்டக்கல்லுாரி முதல்வர் கிருஷ்ண லீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

