/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விளையாட்டுப் போட்டி தங்கம் வென்ற தமிழக வீரர்கள்
/
விளையாட்டுப் போட்டி தங்கம் வென்ற தமிழக வீரர்கள்
ADDED : ஜன 08, 2024 05:13 AM

விழுப்புரம்; தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், தமிழக மல்லர் கம்ப வீரர்கள் தங்கப்பதக்கம் வெற்றனர்.
தேசிய அளவிலான பீச் விளையாட்டு போட்டிகள், கடந்த 5, 6 தேதிகளில், டையூ டாமனில் நடந்தது.
பல்வேறு மாநில வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியில், தமிழகம் சார்பில் மல்லர் கம்ப வீரர்கள் ரோகித், அபினேஷ், வெங்கட், பிரபாகரன், பாலாஜி, ேஹமச்சந்திரன், தருண்யா, கல்பனா, சவுஜன்யா, யாழினி, ரஞ்சனா, கிருஷ்ணகுமாரி ஆகிய 12 பேர் பங்கேற்றனர். இக்குழுவினர், தங்கப் பதக்கம் உட்பட 3 கோப்பைகளை வென்றனர்.
தமிழக வீரர்கள், ஆண்கள் பிரிவில் பிரமிட் போட்டியில் தங்க பதக்கம், குழு போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றனர். பெண்கள் பிரிவு பிரமிட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
போட்டிகளில் வெற்றி பதக்கங்களை பெற்ற வீரர்களுக்கு, மல்லர் கம்ப பயிற்சியாளர்கள் சரவணன், விசு, மேலாளர் செந்தமிழ் கிரிஜா ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.