/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலும் தமிழகம் முதலிடம் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு

ADDED : டிச 20, 2024 06:08 AM
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தைலாபுரத்தில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று அளித்த பேட்டி:
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என ஆட்சிக்கு வந்த தி.மு.க., தற்போது கடன் வாங்குவதிலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலும் முதன்மை மாநிலமாக முன்னேறியுள்ளது. ரூ.8.34 லட்சம் கோடி கடனுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
வட்டி கட்டுவதில் 54,676 கோடி ரூபாயுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு திவாலாகி விடும்.
தமிழகத்தில் 26 இடங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறக்க அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. மணலுக்கு மாற்றாக செயற்கை மணல் மற்றும் இறக்குமதி மணலை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டம், லோக்சபா கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முடிவு வந்த பிறகு பா.ம.க., தன் நிலைப்பாட்டை அறிவிக்கும்.
அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அம்பேத்கரை கொச்சைப்படுத்துவதையோ, அவமதிப்பதையோ ஏற்க முடியாது. அம்பேத்கர் இல்லை என்றால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரண பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி, விரிவான அறிக்கையுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி குழுவினர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வெள்ள நிவாரண நிதியை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பால் 15 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு 6 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கியுள்ளது. விடுபட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.