/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக வெற்றிக்கழக மாநாடு; திரளான தொண்டர்கள் பங்கேற்பு
/
தமிழக வெற்றிக்கழக மாநாடு; திரளான தொண்டர்கள் பங்கேற்பு
தமிழக வெற்றிக்கழக மாநாடு; திரளான தொண்டர்கள் பங்கேற்பு
தமிழக வெற்றிக்கழக மாநாடு; திரளான தொண்டர்கள் பங்கேற்பு
ADDED : அக் 27, 2024 11:52 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் முதல் மாநில மாநாடு நேற்று மாலை ௩:00 மணிக்கு துவங்கியது.
மாநாட்டிற்கு கட்சி தலைவர் விஜய் தலைமை தாங்கி, கட்சிக்கொடியை பாடல் இசைக்க மாநாட்டு முகப்பில் உள்ள 100 அடி உயர கொடி கம்பத்தில் ரிமோட் மூலம் ஏற்றி வைத்தார். பின், மேடையின் நடுவே அமைக்கப்பட்ட ஆறு அடி உயர ரேம்ப் வே மீது 800 மீட்டர் துாரம் நடந்து சென்றபடி கட்சித் தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்றார்.
மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்றார். பொருளாளர் வெங்கட்ராமன், விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, தலைவர் குஷி மோகன், துணைத் தலைவர் வடிவேல்.
மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் சுரேஷ், விக்கிரவாண்டி ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ், தொகுதி பொறுப்பாளர்கள் சிவா, நவீன் ராஜ், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கார்த்திக், பாரதி. தொகுதி இணை பொறுப்பாளர்கள் தனஞ்செயன், மணிராஜன், மதியழகன், பிரகாஷ், ஜில்லா ராம், தாஸ், விஜய் ரகு, பிருத்திவி ராஜ்.
ஒன்றிய ,கிளை நிர்வாகிகள் மகாலட்சுமி வினோத், பழனியம்மாள், பன்னீர், முனுசாமி, ஞானவேல், விஜயன், முரளி, சுரேஷ், அருள்ஜோதி ,சரண், விக்னேஷ், மதன்ராஜ் ,பெருமாள், செந்தில், ஏழுமலை, சரண்ராஜ், நித்திஷ், அரவிந்த் குமார், சூர்யா, மகேஷ், கலைவாணன், மனோஜ் குமார், அஜித் குமார், பாஸ்கர், தினகர்.
முன்னாள் ராணுவ வீரர் நாகராஜன், வானுார் கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் மாரிமுத்து என்கிற ஜான், மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்திக், ஒன்றிய நிர்வாகிகள் ராஜ், சுமதி, நவீன்குமார், அர்ஜூனன், குமார், லியோ சசிகுமார், சந்திர சூடன், அரிபுத்திரன், ராஜா, வினு பிரசாத், சக்திவேல், பிரகாஷ், சகாதேவன், டில்லி பாபு, சதீஷ், தமிழ்செல்வன், அரவிந்த் என்கிற அருணகிரி, ரம்யா அரிபுத்திரன்.மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டி கோபி, செயலாளர் தளபதி அமீன், இளைஞரணி தலைவர் ராஜ்குமார் உட்பட அனைத்து அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.