/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக வெற்றிக் கழக மாநாடு காவல் துறை மீண்டும் 'கிடுக்கிப்பிடி'
/
தமிழக வெற்றிக் கழக மாநாடு காவல் துறை மீண்டும் 'கிடுக்கிப்பிடி'
தமிழக வெற்றிக் கழக மாநாடு காவல் துறை மீண்டும் 'கிடுக்கிப்பிடி'
தமிழக வெற்றிக் கழக மாநாடு காவல் துறை மீண்டும் 'கிடுக்கிப்பிடி'
ADDED : அக் 16, 2024 08:22 AM
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சி மாநாடு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை மீண்டும் பல்வேறு கேள்விகள் எழுப்பி நோட்டீஸ் வழங்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27ம் தேதி, நடிகர் விஜய் துவக்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளை போலீசார் விதித்து, அதில் 17 நிபந்தனைகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் மாநாடு தொடர்பாக, மேலும் விபரங்கள் கேட்டு, நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:
மாநாட்டில் 1.50 லட்சம் பேர் பங்கேற்பார்கள், 50 ஆயிரம் சேர்கள் போடப்படும் என தெரிவித்துள்ளீர்கள். மாநாட்டிற்கு பொதுமக்களும், ரசிகர்களும் பொது போக்குவரத்தை பயன்படுத்தி வர உள்ளதாக கூறி உள்ளீர்கள்.
மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்த விழுப்புரம் -சென்னை சாலையில் 28 ஏக்கர் நிலமும் கூடுதலாக 15 ஏக்கர் நிலமும், வட தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த 40 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்துள்ளதாக கூறியுள்ளீர்கள். இதற்கான திட்டம், வரைபடத்தை காவல் துறையிடம் வழங்க வேண்டும்.
மாநாடு நடைபெறும் காலம் வடகிழக்கு பருவ மழை காலமாக இருப்பதால் வாகன நிறுத்துமிடத்தில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்புள்ளது. அதனால் வாகனங்கள் சிரமமின்றி நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாநாட்டிற்கு மாவட்டம் வாரியாக வருகின்ற வாகனங்கள் கார், வேன், பஸ் ஆகியவற்றின் விபரங்களையும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
த.வெ.க., மாநாட்டிற்கு காவல் துறை கேட்கும் அடுக்கான கேள்விகள் போல பிற கட்சிகளின் மாநாட்டிற்கு கேட்கவில்லை என, நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தனர்.