/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பவ்டா கல்லூரியில் தமிழ் கருத்தரங்கம்
/
பவ்டா கல்லூரியில் தமிழ் கருத்தரங்கம்
ADDED : ஆக 03, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த கொல்லியங்குணம் பவ்டா கலை அறிவியல் கல்லுாரியில் தமிழ்த் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். மாணவி ஷர்மிளா வரவேற்றார். பவ்டா கல்வி குழும இயக்குநர் பழனி, கல்லுாரி நிர்வாக அலுவலர் மோகனசுந்தரம் வாழ்த்தி பேசினர். கல்லுாரி துணை முதல்வர் சேகர் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் செங்குட்டுவன் 'விழுப்புரம் மாவட்ட வரலாற்று தடயங்கள்' தலைப்பில் பேசினார்.
நிகழ்ச்சியை மாணவிகள் தீபிகா, வைதீஸ்வரி தொகுத்து வழங்கினர். உதவி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவி அபிநயா நன்றி கூறினார்.