/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைபாசில் டேங்கர் லாரி விபத்து: பெட்ரோல் கசிந்ததால் பரபரப்பு
/
பைபாசில் டேங்கர் லாரி விபத்து: பெட்ரோல் கசிந்ததால் பரபரப்பு
பைபாசில் டேங்கர் லாரி விபத்து: பெட்ரோல் கசிந்ததால் பரபரப்பு
பைபாசில் டேங்கர் லாரி விபத்து: பெட்ரோல் கசிந்ததால் பரபரப்பு
ADDED : டிச 05, 2024 07:08 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைபாசில் டேங்கர் லாரி திடீரென விபத்துக்குள்ளாகி பெட்ரோல், டீசல் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து கரூர் நோக்கி, பெட்ரோல், டீசல் ஏற்றி கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. இந்த லாரியை, சென்னையை சேர்ந்த வெங்கடேசன்,42; என்பவர் ஓட்டி சென்றார்.
இந்த லாரி, நேற்று முன்தினம் இரவு 1.00 மணிக்கு விழுப்புரம் அருகே அய்யனம்பாளையம் என்ற இடத்தில் சென்னை பைபாஸ் சாலையில் வந்த போது, திடீரென வலதுபுறம் டயர் வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில், வெங்கடேசன் சிறிய காயங்களோடு உயிர் தப்பினார்.
டேங்கரில் இருந்த பெட்ரோல், டீசல் கசிந்து பைபாசில் ஓடியதால், சென்னை சாலையில் வாகன போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் வரவழைத்து விபத்தில் சிக்கிய லாரியை துாக்கி அப்புறப்படுத்தினர். சாலையில் கொட்டிய டீசல், பெட்ரோலை மண் கொட்டி சீரமைத்தனர். இந்த சம்பவத்தால், 1.30 மணி வரை அரை மணி நேரம் சென்னை பைபாசில் போக்குவரத்து ஒருபுறத்தில் தடைப்பட்டது.