/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரூ.63.54 லட்சம் மதிப்பில் தார் சாலை பணி அமைச்சர் மஸ்தான் துவக்கி வைப்பு
/
ரூ.63.54 லட்சம் மதிப்பில் தார் சாலை பணி அமைச்சர் மஸ்தான் துவக்கி வைப்பு
ரூ.63.54 லட்சம் மதிப்பில் தார் சாலை பணி அமைச்சர் மஸ்தான் துவக்கி வைப்பு
ரூ.63.54 லட்சம் மதிப்பில் தார் சாலை பணி அமைச்சர் மஸ்தான் துவக்கி வைப்பு
ADDED : ஜன 04, 2024 03:48 AM

செஞ்சி: ராஜாம்புலியூரில் ரூ.63.54 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.
வல்லம் ஒன்றியம் ராஜாம்புலியூரில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 63.54 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது.
ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் ராஜசக்தி பூபதி முன்னிலை வகித்தார்.
ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசி பாண்டியன் வரவேற்றார்.
அமைச்சர் மஸ்தான் பூமி பூஜை செய்து சாலை பணியை துவக்கி வைத்தார். தொடர்ந்து 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் துரை, இளம்வழுதி, மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலைவாணி, கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழரசன், ஒன்றிய நிர்வாகிகள் ஏழுமலை, கதிரவன், ராமதாஸ், பத்மநாபன், சிவசங்கரன், சங்கர், பன்னீர்செல்வம், தேசிங்கு, ஜெயபாலன், ஊராட்சி துணை தலைவர்கள் லட்சுமி, சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பஸ் வசதி கேட்ட மூதாட்டி
விழாவிற்கு வந்திருந்த மூதாட்டி ஒருவர் ராஜாம்புலியூர் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் அவதிப்படுவதாக அமைச்சர் மஸ்தானிடம் தெரிவித்தார்.
உடனடியாக பஸ் வசதி செய்து தருகிறேன் என அந்த மூதாட்டியிடம் அமைச்சர் மஸ்தான் உறுதியளித்தார்.