ADDED : ஜூன் 20, 2025 11:38 PM

திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில் புதிதாக தார் சாலை போடும் பணி நடந்தது.
திண்டிவனம் மேம்பாலத்தை சீரமைக்க 8.13 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்தது. போக்குவரத்து துவங்கிய நிலையில், பாலத்தின் மேல்பகுதியில் உள்ள சாலையின் இணைப்பு பகுதி மேடும், பள்ளமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன் மேம்பாலத்தின் மேல்பகுதியில், புதுச்சேரி செல்லும் சாலை மட்டும் சீரமைக்கப்பட்டது. செஞ்சி, சென்னை, விழுப்புரம் மார்க்கமாக செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது குறித்து, பொது மக்கள் தரப்பில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில், செஞ்சி, விழுப்புரம் மார்க்கத்தில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணி நடந்தது.
பணிகளை உதவி கோட்ட பொறியாளர் கவிதா, உதவி பொறியாளர்கள் கோகுல கிருஷ்ணன், தீனதயாளன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.