sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடோனில் மாயமான மதுபாட்டில்கள் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் அதிகாரிகள் ரூ.27 லட்சம் தண்டம் கட்டும் பரிதாபம் புலம்பும் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன்கள்

/

குடோனில் மாயமான மதுபாட்டில்கள் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் அதிகாரிகள் ரூ.27 லட்சம் தண்டம் கட்டும் பரிதாபம் புலம்பும் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன்கள்

குடோனில் மாயமான மதுபாட்டில்கள் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் அதிகாரிகள் ரூ.27 லட்சம் தண்டம் கட்டும் பரிதாபம் புலம்பும் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன்கள்

குடோனில் மாயமான மதுபாட்டில்கள் அதிர்ச்சியடைந்த டாஸ்மாக் அதிகாரிகள் ரூ.27 லட்சம் தண்டம் கட்டும் பரிதாபம் புலம்பும் சூப்பர்வைசர், சேல்ஸ்மேன்கள்


ADDED : ஆக 04, 2025 11:35 PM

Google News

ADDED : ஆக 04, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த மிழக அரசின் வருவாயில் பிரதானமாக இருப்பது டாஸ்மாக் விற்பனை. இந்த டாஸ்மாக் துறையில் சில மாதங்களாக மதுபாட்டில்கள் மாயமாவது தொடர்ந்து வருகின்றது.

இந்த மதுபாட்டில்கள் நேரடியாக பார்களுக்கு செல்கிறதா அல்லது கையாடல் நடக்கிறதா என கண்டறிய அரசு உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்த, மாவட்ட டாஸ்மாக் குடோன்களில் அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 மாவட்டங்களிலும் உள்ள 203 டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்கள் சப்ளை செய்யப்படுகிறது. இந்த கடைகளின் மூலம் நாளொன்றுக்கு 3 கோடி ரூபாய்க்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், சென்னையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் விழுப்புரம் டாஸ்மாக் குடோனில் ஆய்வு செய்தனர். அப்போது, பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையைவிட 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் குடோனில் குறைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழுவினர் மட்டுமின்றி, மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

அந்த தொகை 27 லட்சம் ரூபாயை அரசுக்கு, மாவட்ட அதிகாரிகள் செலுத்த வேண்டும் என ஆய்வு குழுவினர் கறாராக கூறிவிட்டனர். இதை தொடர்ந்து, இப்பிரச்னையில் இருந்து அதிகாரிகள் தப்பித்துக்கொள்ள சூப்பர்வைசர், சேல்ஸ்மேன் உள்ளிட்ட ஊழியர்களிடம் டாஸ்மாக் அதிகாரிகள், பணம் வசூல் செய்து சிறுக, சிறுக அந்த தொகையை செலுத்தி வருகின்றனர்.

இது குறித்து டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'டாஸ்மாக்கில் ஸ்கேனர் முறை வந்த பிறகு, முறைகேடுகள் ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டு வருகிறது. 'என்ட் டூ என்ட்' என்ற முறையில் மதுபான தொழிற்சாலைகளில் இருந்து ஏற்றி கடைகளுக்கு கொண்டு சென்று இறக்கும் வரை மதுபாட்டில்கள் எண்ணிக்கை ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் தான் தற்போது மதுபாட்டில்கள் மாயமானது கண்டறியப்பட்டது.

இந்த மதுபாட்டில்களை டாஸ்மாக் குடோனில் வேலை செய்பவர்கள் குடிப்பதற்கு எடுத்து விடுகின்றனர். இதேபோன்று, லோடு ஏற்றி வருபவர்களும் வழியில் மதுபாட்டில்களை எடுத்து விட்டு அட்டைகளை வைத்து விடுகின்றனர்.

டாஸ்மாக் கடைகளுக்கு வரும்போது பட்டியலில் உள்ள பாட்டில்களை விட குறைவாக தான் வருகிறது. யாரோ செய்யும் தவறை முறையாக கண்டுபிடிக்காமல் எங்களிடம் பணம் வசூலிக் கின்றனர்' என்றார்.






      Dinamalar
      Follow us