ADDED : ஆக 28, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் ராமஜெயம் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டத்தை மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
