ADDED : செப் 09, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் மற்றும் டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார்.
இதில், டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் டெலிவரி சுமைப்பணி தொழிலாளர்களுக்கு, லாரியில் கொண்டு சென்று கடைகள் முன் இறக்கி வைக்கும் பணிக்கும், கடைகளுக்குள் கொண்டு சென்று அட்டி போட்டு அடுக்கி வைப்பதற்கும் பெட்டி ஒன்றுக்கு 15 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, நிர்வாகிகள் பழனி, அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
