/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிரைனைட் கற்களுடன் நின்றிருந்த டாரஸ் லாரி பறிமுதல்
/
கிரைனைட் கற்களுடன் நின்றிருந்த டாரஸ் லாரி பறிமுதல்
கிரைனைட் கற்களுடன் நின்றிருந்த டாரஸ் லாரி பறிமுதல்
கிரைனைட் கற்களுடன் நின்றிருந்த டாரஸ் லாரி பறிமுதல்
ADDED : அக் 28, 2025 06:22 AM
செஞ்சி: செஞ்சி அருகே கிரைனைட் கற்களுடன் கேட்பாரற்று நின்ற டாரஸ் லாரியை தாசில்தார் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த மேல்சித்தாமூர் பார்வநாதர் ஜெயின் கோவில் பின்புற தெருவில் நேற்று காலை 11:00 மணியளவில் கிரைனைட் கற்களுடன் டாரஸ் லாரி(டி.என் 52 - பி2355) கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது.
இதுகுறித்து வி.ஏ.ஓ., பச்சையப்பன், தாசில்தார் துறைசெல்வம் மற்றும் செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தாசில்தார் துரைசெல்வன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் லாரியை பரிமுதல் செய்து செஞ்சி தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.
வி.ஏ.ஓ., பச்சையப்பன் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார், லாரியின் பதிவு எண்ணை கொண்டு லாரி யாருக்கு சொந்தமானது என்றும், கிரைனைட் கற்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன எனவும் விசாரித்து வருகின்றனர்.

