/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
46 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு
/
46 மையங்களில் ஆசிரியர் தகுதி தேர்வு
ADDED : நவ 13, 2025 09:09 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 46 மையங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும், ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 ஆகிய தேர்வுகள், நாளை 15ம் தேதி மற்றும் 16 தேதிகளில் நடக்கிறது
விழுப்புரம் மாவட்டத்தில், தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்துள்ளது.
முதல் தாள் தேர்வுக்கென 16 தேர்வு மையங்களும், இரண்டாம் தாள் தேர்வுக்கென 46 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், ஆசிரியர் தகுதித்தேர்வினை 4001 பேர் எழுதுகின்றனர்.
இதில் 99 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் ஆவர். முதல் தாள் தேர்வு எழுதுவோர் 13 ஆயிரத்து 313 பேர், அதில் 229 மாற்றுத்திறனாளி தேர்வர்கள் ஆவர்.
தேர்வர்கள் காலை 8:30 மணி முதல் 9:30 மணிக்குள், தேர்வு மையத்திற்கு வர வேண்டும். காலை 9:30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள், தேர்வெழுத அனும திக்கப்படமாட்டார்கள்.
தேர்வு, காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரையிலும் நடக்கும். மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு மட்டும் கூடுதலாக 1 மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டு, பிற்பகல் 2:00 மணிக்கு முடிவடையும்.
தேர்வர்கள் ஏதெனும் ஒரு அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வரவேண்டும். தேர்வெழுத கருப்பு நிற பந்து முனை பேனா எடுத்து வர வேண்டும். தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் புகைப்படம் தெளிவாக இல்லாமல் இருந்தால், தேர்வர்கள் அண்மையில் எடுக்கப்பட்ட 3 புகைப்படம் எடுத்துவர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

