ADDED : செப் 08, 2026 09:53 PM
விழுப்புரம்: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோலியனுார் கிளை சார்பில், ஆசிரியர் தின விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார தலைவர் செபாஸ்டின் தலைமை தாங்கினார். மகளிரணி செயலாளர் ஜெயந்திமாலா வரவேற்றார்.
பொருளாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயானந்தம், ஆசிரியர் தின விழாவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, ஆசிரியர்களுக்கு கட்டுரை, ஓவியம், மியூசிக்கல் சேர் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளை, நிர்வாகிகள் சங்கீதா, ஜான்பீட்டர், சரஸ்வதி ஆகியோர் நடத்தினர்.
பின், போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நிர்வாகிகள் கலிவரதன், சர்மிளாதேவி, ஜெயந்தி, மாதவி, பாலமுருகன், ராஜவர்தன், புனிதா, சுஜாதா, வளர்மதி, மூர்த்தி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
