ADDED : ஏப் 24, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அச்சுதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். துணைத் தலைவர் சேகர்சாமி, துணை செயலாளர் கிறிஷ்டிஜாய்ஸ் தங்கம், அமைப்பாளர் வீரமணி முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் நாராயணன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட பொருளாளர் சுவர்ணலதா, ஒன்றிய பொறுப்பாளர்கள் அந்தோணிமுத்து, வீரமணி, ப்ரோமியோ கருத்துரை வழங்கினர்.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அறிவிக்க வேண்டும், சரண் விடுப்பை இந்தாண்டு முதலே வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றினர்.

