/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர் கூட்டமைப்பினர் கண்ணில் துணி கட்டி நுாதன ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர் கூட்டமைப்பினர் கண்ணில் துணி கட்டி நுாதன ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் கூட்டமைப்பினர் கண்ணில் துணி கட்டி நுாதன ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் கூட்டமைப்பினர் கண்ணில் துணி கட்டி நுாதன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 10, 2025 12:18 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஆசிரியர் கூட்டமைப்பினர் நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கீதா, பாரத் உள்ளிட்டோர் தலைமையில், நேற்று காலை, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு, கோரிக்கை வலியுறுத்தி, கண்ணில் சிவப்பு ரிப்பன் கட்டி, நுாதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் இடை நிலை ஆசிரியர் பணிக்காக தேர்வு எழுதி வேலைக்காக 25,000 பேர் காத்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2,768 பணியிடங்களுக்கு மட்டும் தேர்வை அறிவித்துள்ளது.இது, கடந்த 12 ஆண்டுகளாக பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
கடந்த 2013 முதல், காலி பணியிடங்களை நிரப்பாமல் 4 முறை டி.ஆர்.பி., தகுதி தேர்வுகளை மட்டும் அரசு நடத்தியுள்ளது. தற்போது, தகுதியுடன் காத்துள்ள பலருக்கு 40 முதல் 50 வயதை கடந்துள்ளதால், அரசின் மிக குறைந்த பணியிடம் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 23 ஆயிரம் ஆசிரியர்கள் காத்துள்ள நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதும் வேதனை அளிக்கிறது. 15,000 காலி பணியிடங்கள் உள்ளதால், முழு காலியிடங்களையும் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.