ADDED : பிப் 22, 2026 04:58 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு சார்பில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மாநிலம் தழுவிய பட்டினி போராட்டம் நடந்தது.
விழுப்புரத்தில், நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, மாநில பொருளாளர் தயாளன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் கிருஷ்ணாபாய் வரவேற்றார். நிர்வாகிகள் ரவி, செந்தில், பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு விரிவுபடுத்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் நடந்த போராட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.
