ADDED : ஜன 07, 2026 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சம வேலைக்கு, சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகம் முன் 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு முன் நியமித்த இடைநிலை ஆசிரியர்களுக் கும் அதற்கு முன் நியமிக் கப்பட்ட ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி நேற்று முன் தினம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று 2வது நாளாக, போராட் டத்தை தொடர்ந்தனர்.

