/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆசிரியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2024 06:46 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டணி கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, டிட்டோ ஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் லுார்துசேவியர், ஜெயானந்தன், ஷேக்மூசா, கன்னியப்பன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் குமார் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், தஞ்சாவூரில் அரசு பள்ளி வளாகத்தில் ஆசிரியர் ரமணி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பும், பணி பாதுகாப்புக்கான சட்டத்தையும் தமிழக அரசு இயற்ற வேண்டும் என வலிறுத்தினர்.
திண்டிவனம்
ஒலக்கூர் ஒன்றிய அனைத்து நிலை ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பணி பாதுகாப்பு கோரி வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணிக்கு அஞ்சலி செலுத்தினர்.