/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீப்பற்றி எரிந்த தேக்கு மரத்தோப்பு
/
தீப்பற்றி எரிந்த தேக்கு மரத்தோப்பு
ADDED : ஏப் 24, 2025 05:42 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் ஒரு ஏக்கர் தேக்கு மரத்தோப்பு திடீரென்று தீப்பற்றி சேதமடைந்தது.
திண்டிவனம் அருகே உள்ள வெண்மணியாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் தனஜெயன், 45; அதே கிராமத்தில் இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் தேக்கு மரத்தோப்பு உள்ளது. நேற்று முன்தினம் மாலை இவரது தேக்கு மரத்தோப்பு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கு முன்னதாக, தேக்கு மரத்தோப்பில் சொட்டு நீர் பாசனத்திற்காக வைத்திருந்த பைப்புகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். முன்விரோதம் காரணமாக தேக்கு மரத்தோப்பு தீ வைக்கப்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததா என ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

