/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில மல்லர் கம்ப போட்டிக்கு அணி தேர்வு
/
மாநில மல்லர் கம்ப போட்டிக்கு அணி தேர்வு
ADDED : அக் 02, 2025 11:01 PM

விழுப்புரம்; தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாநில அளவிலான அணி தேர்வு நடந்தது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில், தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான மல்லர் கம்பம் போட்டி நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அந்த தேசிய மல்லர் கம்ப போட்டிக்கு, தமிழக மாநில அளவிலான அணி தேர்வு நடந்தது.
கள்ளக்குறிச்சி விவேகானந்தா பள்ளி மையத்தில் நடந்த தேர்வு போட்டியில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மல்லர் கம்ப மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மல்லர் கம்ப கழக செயலாளர் துரை செந்தில்குமார், தலைவர் ஜனார்த்தனன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மல்லர் கம்பம் பயிற்சியாளர் மல்லன் ஆதித்தன் உள்ளிட்ட தேர்வு குழுவினர், மாணவர்கள் தேர்வை ஒருங்கிணைத்தனர்.
இதில், தமிழக முழுவதும் பங்கேற்ற மாணவர்களில், 12 மாணவர்கள், 12 மாணவிகள் என மொத்தம் 24 பேர் மாநில அணிக்கு தேர்வாகினர்.
குறிப்பாக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர்கள், கேலோ இந்தியா மல்லர் கம்ப பயிற்சி மைய மாணவர்கள், மாவட்டம் மல்லர் கம்ப கழக மாணவர்கள் அணியில் தேர்வாகினர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு பெற்ற மாணவர்களை தேர்வு குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.