ADDED : அக் 14, 2024 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம், : திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் மணி நேற்று மாலை, சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றார்.
அப்போது சந்தேகப்படும்படி நின்றிருந்த அதே பகுதியைச் சேர்ந்த மோகேஷ், 24; என்பவரை பிடித்து சோதனை செய்ததில், அவரிடம் 40 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
உடன் மோகேஷ் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.