ADDED : அக் 01, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் தலைமையில் போலீசார் கிடங்கல் (2) பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் தெருவில், யமஹா பைக்கில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர் பைக் டேங்க் கவரில், விற்பனைக்காக 5 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது.
மேலும் அவர், திண்டிவனம், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன் மகன் வீரா, 29; என்பதும் தெரிந்தது. உடன், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கஞ்சா மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.