/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
/
கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
ADDED : அக் 08, 2024 05:59 AM
மூங்கில்துறைப்பட்டு : கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த சவேரியார்பாளையத்தை சேர்ந்த சவரிமுத்து மகன் ஜான்சன்,32; சென்னையில் ஐ.டி. கம்பெனியில் கார் டிராவல்ஸ் நடத்தி வந்தார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். அதனால், மனமுடைந்த ஜான்சன் நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி பிரான்சிஸ் டயானா அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.