/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் படுகாயம்
/
ரயிலில் இருந்து விழுந்த வாலிபர் படுகாயம்
ADDED : அக் 27, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயிலிருந்து தவறி விழுந்து வாலிபர் படுகாயமடைந்தார்.
புதுக்கோட்டை, ஜீவா நகரைச் சேர்ந்தவர் கோபால் மகன் நிதீஷ்குமார், 21; இவர் நேற்று முன்தினம் இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தஞ்சாவூரிலிருந்து சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றார்.
நேற்று அதிகாலை 1:30 மணியளவில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தைக் கடந்த போது, எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை ரயில்வே போலீசார் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.