ADDED : பிப் 16, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் இறந்தார்.
விழுப்புரம், பானாம்பட்டை சேர்ந்தவர் அருள் மகன் மோகன்,18; அதே பகுதியை சேர்ந்தவர்கள் பரமசிவம் மகன் திலீபன்,20; சுப்ரமணி மகன் சபரிநாதன்,19; நண்பர்களான இவர்கள் மூவரும் நேற்று மாலை 6 மணிக்கு ஹூண்டாய் காரில் வி.அகரம் வழியாக பண்ருட்டி மார்க்கமாக சென்றனர்.
காரை மோகன் ஓட்டினார். இரவு 7:30 மணிக்கு, சுந்தரிப்பாளையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையார பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இடிபாட்டில் சிக்கிய மோகன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விபத்து குறித்து வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.