/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'உங்கள் கனவ சொல்லுங்க' திட்டம் கணக்கெடுப்பு பணி: கலெக்டர் ஆய்வு
/
'உங்கள் கனவ சொல்லுங்க' திட்டம் கணக்கெடுப்பு பணி: கலெக்டர் ஆய்வு
'உங்கள் கனவ சொல்லுங்க' திட்டம் கணக்கெடுப்பு பணி: கலெக்டர் ஆய்வு
'உங்கள் கனவ சொல்லுங்க' திட்டம் கணக்கெடுப்பு பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 24, 2026 07:06 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 'உங்கள் கனவ சொல்லுங்க' திட்ட கணக்கெடுப்பு பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.
உங்கள் கனவ சொல்லுங்க திட்டத்தின்படி, வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படை தேவைகளையும், கனவுகளையும் நிறைவேற்றுவதே முக்கிய நோக்கம்.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 94 ஆயிரத்து 940 குடும்பங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதற்காக 1,678 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, மக்களின் தேவைகளைக் நேரில் கேட்டறிந்து வருகின்றனர்.
முதல் கட்டமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று படிவங்கள் வழங்கப்பட்டு, அடுத்த கட்டமாக 2 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சென்று செயலியில் தகவல்களைப் பதிவு செய்யப்படும்.
கனவு அட்டை பதிவு முடிந்தவுடன், தனி அடையாள எண் கொண்ட கனவு அட்டை வழங்கப்படும்.
இதன்படி, விழுப்புரம் நகராட்சி நரசிங்கபுரம் பகுதி, காணை ஒன்றியம், பெரும்பாக்கம் ஊராட்சி ஆகிய இடங்களில் 'உங்கள் கனவ சொல்லுங்க” திட்ட கணக்கெடுக்கும் பணியை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் ஆய்வு செய்தார். மகளிர் திட்ட இணை இயக்குநர் செந்தில்வடிவு, உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) கமலவள்ளி உடன் இருந்தனர்.

