/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் புனரமைப்பு பணி நிறுத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
கோவில் புனரமைப்பு பணி நிறுத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
கோவில் புனரமைப்பு பணி நிறுத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
கோவில் புனரமைப்பு பணி நிறுத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : அக் 16, 2024 07:23 AM

திண்டிவனம் : திண்டிவனத்தில் கோவில் புனரமைத்து புதிதாக கட்டும் பணியை நிறுத்திய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
திண்டிவனம் நகராட்சி, 13வது வார்டு, பெலாக்குப்பம் ரோட்டில் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நகராட்சி அனுமதியின்றி, பாட்டை புறம்போக்கு இடத்தில் கோவில் இருப்பதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் நகராட்சி சார்பில், கோவில் பூசாரி பரந்தாமனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், நகராட்சி அனுமதியின்றி புனரமைத்து கட்டப்பட்டு வரும் கோவில் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காலை 11:15 மணியளவில், முன்னாள் கவுன்சிலர் வடபழனி தலைமையில் பெலாக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கு மேற்பட்டோர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நகராட்சி கமிஷனர் குமரன், நகரமைப்பு அலுவலர் திலகவதி, சர்வேயர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முறைப்படி கோவில் கட்டப்படும் இடம் பாட்டை பகுதியில் உள்ளதா என்பது குறித்து அளவீடு செய்யப்படும். அதுவரை கோவில் கட்டும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.