/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு 4 வழிச்சாலை பணிக்கு டெண்டர்
/
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு 4 வழிச்சாலை பணிக்கு டெண்டர்
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு 4 வழிச்சாலை பணிக்கு டெண்டர்
விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு 4 வழிச்சாலை பணிக்கு டெண்டர்
ADDED : ஏப் 02, 2025 05:43 AM
பண்ருட்டி : விக்கிரவாண்டி-சேத்தியாத்தோப்பு இடையிலான நான்கு வழிச்சாலை பணியை மேற்கொள்ள, கேரளாவை சேர்ந்த இ.கே.கே., நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை (வி.கே.டி.,) நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்று பிரிவாக பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதில், விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையிலான 66 கி.மீ., நீள சாலை பணி கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தம் விடப்பட்டது. இப்பணியை கடந்த 2018ம் ஆண்டு ரிலையன்ஸ் இன்ப்ராஸ்டெக்சர் நிறுவனம் துவக்கியது.
2019ம் ஆண்டு கொரானோ தொற்று காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.
பின், கால அவகாசம் வழங்கியும் ரிலையன்ஸ் நிறுவனம் பணியை முடிக்கவில்லை. இந்நிலையில் விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையிலான நான்குவழிச்சாலை அமைக்க நகாய் கடந்த பிப்., மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.
இதற்கான ஒப்பந்தபுள்ளிகள் கடந்த மார்ச் மாதம் பிரித்ததில், கேரளாவின் இ.கே.கே., என்ற நிறுவனம் 656 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் செய்ய கோரியது.
இதனை நகாய் ஏற்றுக் கொண்டது. அதையடுத்து பணிகள் இந்த மாதத்தில் துவங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இப்பணியில் பண்ருட்டி, வடலுாரில் பைபாஸ், ரயில்வே ஓவர் பிரிட்ஜ் கோலியனுார், பண்ருட்டி வடலுாரில் வர உள்ளது.பெரிய பிளைஒவர் -1ம், கிராமங்களை இணைக்கும் பகுதியில் சிறிய பிளை ஒவர்-12, பெரிய பிளை ஒவர் -10, பாதசாரி பாதைகள்-4, சிறுபாலம்-96 வர உள்ளது.

