/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் : கலெக்டர் ஆய்வு
/
சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் : கலெக்டர் ஆய்வு
சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் : கலெக்டர் ஆய்வு
சிறுவர் பூங்காவில் டென்னிஸ் மைதானம் : கலெக்டர் ஆய்வு
ADDED : ஜன 05, 2025 05:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சிறுவர் பூங்காவில் அமைந்துள்ள டென்னிஸ் மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு பணிகளை, கலெக்டர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், ரூ.2.5 கோடி மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டு மைதானங்களும், தியான அறை, உடற்பயிற்சி கூடம் உள்ளன.
இந்த பூங்காவில், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறும் வகையில் ரூ.24.5 லட்சம் மதிப்பீட்டில் டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் பழனி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, நகராட்சி உதவி பொறியாளர் ராபர்ட் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

