/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டணும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
/
கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டணும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டணும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டணும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
ADDED : ஜூலை 18, 2024 03:59 PM

திண்டிவனம்: 'தமிழகத்தில் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி மற்றும் துணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளை, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். நிர்வகிக்கும் அதிகாரத்தை, காவரி மேலாண்மை வாரியத்திற்கு வழங்குவது தான், காவரி சிக்கலுக்கு நிரந்தர தீர்வாகும். எனவே, காவரி மேலாண்மை வாரியத்திற்கு அதிகாரத்தை வழங்கும், வகையில் ஐகோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.
3 ஆண்டு சிறை
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதை தவிர ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளின் கீழ் குறைந்தது நான்கு அல்லது ஐந்து சந்து கடைகள் இயங்கி வருகிறது. இது சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுக்கடைகளாகும். தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்த மதுவிலக்கு திருத்த சட்டத்தின் கீழ், இது மாதிரி உரிமம் இல்லாத இடங்களில் மதுவை விற்பனை செய்பவருக்கு, ஒராண்டு முதல் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை அரசு கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகம் நடந்து வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும், கவர்னரும் தங்களுக்குள்ள மோதலை கைவிட்டு, காலியாக உள்ள பல்லைக்கழகங்களுக்கு துணை வேந்தரை நியமிக்க வேண்டும். துணை முதல்வராக உதயநிதியை நியமிப்பது என்பது, அவர்கள் கட்சி சார்ந்த விஷயம். அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் நீட் தேர்வு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.