/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மயிலம் முருகன் கோவிலில் தைப் பொங்கல் திருவிழா
/
மயிலம் முருகன் கோவிலில் தைப் பொங்கல் திருவிழா
ADDED : ஜன 16, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.
மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.