/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிறுகடம்பூர் கோவிலில் தைப்பூச விழா துவக்கம்
/
சிறுகடம்பூர் கோவிலில் தைப்பூச விழா துவக்கம்
ADDED : ஜன 17, 2024 07:35 AM

செஞ்சி, : செஞ்சி, சிறுகடம்பூர் சுப்ரமணியர் கோவிலில் தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி, சிறுகடம்பூர், கொத்தமங்கலம் சாலையில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் 44ம் ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 25ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று காலை 5:30 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு வேள்வி நடந்தது. 7.30 மணிக்கு சுப்ரமணியர், வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு மகா தீபாராதனையுடன், கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமி வாண வேடிக்கையுடன் வீதியுலா நடந்தது.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

