sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழுப்புரத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா

/

 விழுப்புரத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா

 விழுப்புரத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா

 விழுப்புரத்தில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா


ADDED : பிப் 02, 2026 04:20 AM

Google News

ADDED : பிப் 02, 2026 04:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விழுப்புரம் வள்ளலார் அருள் மாளிகை (எ) ராமலிங்க சுவாமிகள் மடத்தில் 155வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் பெருவிழா நடந்தது.

விழாவையொட்டி, நேற்று காலை 5:30 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 8:00 மணிக்கு சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 7:00 மணி, 10:00 மணி, மதியம் 1:00 மணிக்கும், இரவு 7:00 மணி, 10:00 மணி, இன்று 2ம் தேதி அதிகாலை 5:30 மணி என 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தனர்.

தைப்பூச தினமான நேற்று காலை 9.:30 மணிக்கு முதல் அமர்வு சொற்பொழிவும், 10:30 மணிக்கு திருஅருட்பா இசை நிகழ்ச்சியும், 11:30 மணிக்கு இரண்டாவது அமர்வு சொற்பொழிவும் நடந்தது.

மதியம் 1:00 மணிக்கு ஜோதி தரிசனம் மற்றும் அன்னதானமும், மதியம் 2:00 மணிக்கு, விழுப்புரம், மாம்பழப்பட்டு ரோடு, கொஞ்சும் சலங்கை நாட்டியப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது.

இதில், பங்கேற்ற மாணவர்களுக்கு பொன்முடி எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் விசாலாட்சி பொன்முடி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகர மன்ற துணைத் தலைவர் சித்திக்அலி பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை, இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல் ஆகியோர் செய்தனர்.






      Dinamalar
      Follow us