/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மழைநீரை வெளியேற்ற களமிறங்கிய 'தாசில்தார்'
/
மழைநீரை வெளியேற்ற களமிறங்கிய 'தாசில்தார்'
ADDED : டிச 24, 2024 06:07 AM
விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் சாலையோர வாய்க்கால் சீரமைப்பு பணிகளை, தாசில்தார் நேரில் ஆய்வு செய்தார்.
பெஞ்சல் புயல் கனமழையை யொட்டி, விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதில், ஜனகராஜ் கார்டன், பொன் அண்ணாமலை நகர், கீழ்பெரும்பாக்கம், தாமரைக்குளம், கணேஷ் நகர், தேவநாதசுவாமி நகர் விரிவாக்கம், ஆசிரியர் நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர், குடியிருப்புகளை சுற்றிலும் குளமாக தேங்கி, நிற்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, நகர் மன்ற சேர்மன் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி கமிஷ்னர் வீரமுத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், மழை நீரை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மேலும், விழுப்புரம் அடுத்த சாலை அகரம் கிராமத்தில், சாலையோர வாய்க்கால் சீரமைப்பு பணியை, தாசில்தார் கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்தார். சாலை அகரம் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், வருவாய் அதிகாரி கதிர்வேல், வி.ஏ.ஓ., சதீஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.