/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்
/
இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்
இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்
இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரமோற்சவம் துவக்கம்
ADDED : ஜூன் 01, 2025 11:19 PM
வானுார்: இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் 6ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
வானுார் அடுத்த இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 6ம் ஆண்டு பிரம்மேற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. அன்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றமும், இரவு 7:00 மணிக்கு அதிகார நந்தி சேவையும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது.
விழாவையொட்டி, தினந்தோறும் காலை 9:00 மணிக்கு அபி ஷேகமும், சந்திரசேகரர் உள்புறப்பாடும், காலை 10:00 மணிக்கு மூலவர் அபி ஷேகமும், இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சந்திரசேகரர் புறப்பாடும் நடக்கிறது. வரும் 4ம் தேதி காலை 11:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
அதனை தொடர்ந்து 8ம் தேதி திருத்தேர் வீதியுலாவும், 10ம் தேதி இரவு 7:00 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்.