/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்
ADDED : நவ 07, 2024 06:21 AM

வானுார்; வானுார் அருகே கடையில் பொருட்கள் வாங்குவது போல், பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஒழிந்தியாம்பட்டு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி அலமேலு, 47; ஆரோபுட் பிஸ்கட் கம்பெனிக்கு சொந்தமான கடையை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார்.
நேற்று மதியம் 12;00 மணிக்கு, கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், பொருட்கள் வாங்குவது போல், திடீரென அலமேலு கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றார். பிடிக்க முயன்ற அலமேலுவை தள்ளி விட்டு தப்ப முயன்றார். அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வாலிபரை பிடித்து, வானுார் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கூட்டேரிப்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் மதன்குமார், 25; சென்னை கோயம்பேட்டில் பழக்கடை வைத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.