/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது
/
பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது
பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது
பள்ளி மாணவர்களுக்கான போட்டி விழுப்புரத்தில் 10ம் தேதி நடக்கிறது
ADDED : ஜூலை 06, 2025 04:29 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் வரும் 10ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
தமிழகத்திற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ம் நாளை இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு நாளை நினைவுகூறும் வகையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள், வரும் 10ம் தேதி விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும்.
போட்டிக்கான தலைப்புகள், முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக, மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.