/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி
/
சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி
ADDED : ஜன 17, 2024 07:47 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் திருடிய தம்பதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்,38. இவர், நேருஜி சாலையில் பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நெட்வொர்க் பிரிவு மேலாளராக பணிபுரிகிறார்.
இவர், கடந்த 13ம் தேதி சூப்பர் மார்கெட்டில் பணியிலிருந்த போது, பேரங்கியூரை சேர்ந்த புருஷோத்தமன், 55; அவர் மனைவி சாந்தி, 50; ஆகியோர் தங்களின் கைப்பையில் பால் பவுடர், டீ துாள் பாக்கெட்டுகளை பில் போடாமல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில், சாந்தி, புருஷோத்தமன் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

