/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கந்த சஷ்டி விழா துவங்கியது வீரவாகு தேவர்கள் வீதியுலா
/
கந்த சஷ்டி விழா துவங்கியது வீரவாகு தேவர்கள் வீதியுலா
கந்த சஷ்டி விழா துவங்கியது வீரவாகு தேவர்கள் வீதியுலா
கந்த சஷ்டி விழா துவங்கியது வீரவாகு தேவர்கள் வீதியுலா
ADDED : நவ 03, 2024 04:30 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வீரவாகு தேவர்கள் வீதியுலா நடந்தது.
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. நேற்று காலை 10:30 மணியளவில் மூலவர் ராமநாதீஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து ஆறுமுக சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை வீரவாகு தேவர்கள் வீதியுலா நடந்தது. இரவு வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமிகளுக்கு தீபாராதனையும், உற்சவ மூர்த்தி சுவாமிகள் வீதியுலாவும், தமிழ் வேதவார வழிபாட்டு சபை சார்பில் தேவார, திருப்புகழ் ஓதுதல் நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 7 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் கம்பம் ஏறுதல், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.