/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுவிலக்கு போலீசாரின் 'பேராசை' முதலுக்கே மோசம் போன கதை
/
மதுவிலக்கு போலீசாரின் 'பேராசை' முதலுக்கே மோசம் போன கதை
மதுவிலக்கு போலீசாரின் 'பேராசை' முதலுக்கே மோசம் போன கதை
மதுவிலக்கு போலீசாரின் 'பேராசை' முதலுக்கே மோசம் போன கதை
ADDED : ஜன 14, 2025 07:06 AM
விழுப்புரம் மற்றும் செஞ்சி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசில் பணிபுரியும் ஏட்டுகள் மூவர், சில தினங்களுக்கு முன் கண்டமங்கலம் பகுதியில் வாகன சோதனை செய்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து பைக்கில் 10 மது பாட்டில்களை எடுத்து வந்த நபரை நிறுத்தி, போலீசார் விசாரணை செய்தனர்.
சட்டப்படி வழக்கு பதிந்து கைது செய்யப்போவதாக போலீசார் மிரட்டியுள்ளனர். உடனே அந்த நபர், தனது நண்பர்களுக்கு கொடுப்பதற்காக மதுபாட்டில்களை வாங்கி வந்ததாக கூறி, கெஞ்சியுள்ளார்.
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க பேரம் பேசி ரூ.4,500 பணத்தையும், மதுபாட்டில்களையும் போலீசார் பறித்துக் கொண்டனர். மேலும், ஊருக்கு போனதும் கூடுதலாக பணம் அனுப்ப வேண்டும் என வாய்மொழி உத்தரவிட்டு, அந்த நபரை விடுவித்துள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட போலீஸ் அதிகாரி, பேராசை பிடித்த ஏட்டுகள் மூவரையும் 'சஸ்பெண்ட்' செய்தார்.
இதனை கேள்விப்பட்ட மற்ற போலீசார், கிடைப்பதை வாங்கிக் கொண்டு அனுப்பி இருக்கலாமே, இப்ப முதலுக்கே மோசமாகிவிட்டதே என ஆதங்கப்பட்டனர்.

