/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மருத்துவமனை கட்டடங்கள் அமைச்சர் திறந்து வைத்து ஆய்வு
/
மருத்துவமனை கட்டடங்கள் அமைச்சர் திறந்து வைத்து ஆய்வு
மருத்துவமனை கட்டடங்கள் அமைச்சர் திறந்து வைத்து ஆய்வு
மருத்துவமனை கட்டடங்கள் அமைச்சர் திறந்து வைத்து ஆய்வு
ADDED : ஜன 30, 2024 06:30 AM

செஞ்சி, : சத்தியமங்கலத்தில் நடந்த விழாவில் 2.90 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 9 இடங்களில் 2.40 கோடி ரூபாய் மதிப்பில் என மொத்தம் 2.90 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவத்துறை சார்ந்த கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், புதிய கட்டடங்களை திறந்து வைத்து சுகாதாரத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்வாயன்ஷி நிகாம், செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய சேர்மன்கள் விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன், அமுதா ரவிக்குமார், துணைச் சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் ஏழுமலை, செல்வி ராமசரவணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் யோகப்பிரியா, ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், பச்சையப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 60 கோடி ரூபாய் நிதியில் 400 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி நடந்து வருகின்றது.
இப் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் மற்றும் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.
சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமணன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பரிதி, நகர மன்ற தலைவர் நிர்மலா, முன்னாள் எம்.எல்.ஏ., சீத்தாபதி சொக்கலிங்கம், கமிஷனர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் பவுல்செல்வம் உட்ப பலர் உடனிருந்தனர்.