/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கானல் நீரான விளையாட்டு அரங்கம் திட்டம் வானுார் தொகுதி இளைஞர்கள் ஏமாற்றம்
/
கானல் நீரான விளையாட்டு அரங்கம் திட்டம் வானுார் தொகுதி இளைஞர்கள் ஏமாற்றம்
கானல் நீரான விளையாட்டு அரங்கம் திட்டம் வானுார் தொகுதி இளைஞர்கள் ஏமாற்றம்
கானல் நீரான விளையாட்டு அரங்கம் திட்டம் வானுார் தொகுதி இளைஞர்கள் ஏமாற்றம்
ADDED : ஏப் 16, 2025 08:02 PM
வானுார்: வானூர் தொகுதியில் ரூ. 3 கோடியில் சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் விரைவில் துவங்க வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
தமிழக அரசு ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சிறிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என கடந்த 2021--22ம் ஆண்டு நடந்த சட்டசபையில் அறிவிக்கப்பட்டு அமல்படுத்தி வருகிறது. இந்த விளையாட்டு அரங்கில் தடகள ஓடுபாதை, திறந்தவெளி கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, கோகோ ஆடுகளங்கள், நீளம் தாண்டுதல் பாதை, பார்வையாளர் கேலரி ஆகிய சிறப்பு அசம்சங்களுடன் அமைக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு வானூர் தொகுதியில், உள் விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போதைய கலெக்டர் பழனி தலைமையிலான அதிகாரிகள், புள்ளிச்சப்பள்ளம் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இடம் தேர்வு செய்தனர். விளையாட்டு அரங்கம் அமைக்க மைதானத்தை அளவிடும் பணிகளும் நடந்தது. நிலத்தை அளவீடு செய்த அதிகாரிகள், விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கு இடம் போதுமானதாக இல்லை எனக்கூறி அத்திட்டத்தையே கிடப்பில் போட்டு விட்டனர்.
அதன் பிறகு மாற்று இடத்தையும் தேர்வு செய்ய முன்வரவில்லை. இந்தாண்டு திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளில் ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி துவங்க உள்ளது. ஆனால், முதல் முதலில் வானூர் தொகுதியில் அறிவிக்கப்பட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது. என தெரியாத நிலையில் உள்ளது. விளையாட்டு அரங்கம் மூலம் விளையாட்டு பயிற்சி பெறலாம் என எதிர்பார்ப்பில் காத்திருந்த வானூர் தொகுதி இளைஞர்களுக்கு, விளையாட்டு அரங்கம் திட்டம் கானல் நீராக இருந்து வருகிறது. எனவே மாவட்ட அதிகாரிகள், வானூர் தொகுதியில் இடத்தை தேர்வு செய்து, விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

