/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனம் பாலத்தில் கடைசி கட்ட சீரமைப்பு பணி... துவங்கியது; செஞ்சி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை
/
திண்டிவனம் பாலத்தில் கடைசி கட்ட சீரமைப்பு பணி... துவங்கியது; செஞ்சி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை
திண்டிவனம் பாலத்தில் கடைசி கட்ட சீரமைப்பு பணி... துவங்கியது; செஞ்சி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை
திண்டிவனம் பாலத்தில் கடைசி கட்ட சீரமைப்பு பணி... துவங்கியது; செஞ்சி மார்க்கமாக வாகனங்கள் செல்ல தடை
ADDED : பிப் 06, 2024 11:08 PM

திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியின் கடைசி கட்ட பணிக்காக, செஞ்சி செல்லும் பாதையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திண்டிவனம் மேம்பாலம் கடந்த 2000ம் ஆண்டு கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலானதால், பாலம் பழுதடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் சீரமைப்பு பணிக்காக 8 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, மேம்பாலத்தின் மேல்பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கடைசி கட்டமாக மேம்பாலத்தின் மேல்பகுதியிலிருந்து, செஞ்சி, திருவண்ணாமலை செல்லும் சாலையை சீரமைப்பதற்காக, நேற்று முதல் அந்த சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வாகனங்கள் செல்லாதவாறு தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த தடை காரணமாக புதுச்சேரியிலிருந்து செஞ்சி, திருவண்ணாமலை செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பழைய பஸ் நிலையம் வழியாக வந்து, சர்வீஸ் சாலை வழியாக செல்ல வேண்டும்.
தற்போது மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிலையத்திற்கு வரும் இரண்டு சர்வீஸ் சாலையில் நடைபாதை கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. ஆக்கிரமிப்புகளை போலீசார் துணையுடன் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினால்தான், வாகனங்கள் தடையில்லாமல் நேரு வீதி வழியாக செல்ல முடியும்.
போக்குவரத்து பிசியான செஞ்சி சாலை தற்போது தடை செய்யப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'மேம்பாலம் சீரமைப்பு பணிகள் ஒரு மாத்திற்குள் முடிவடைந்து விடும்' என தெரிவித்தனர்.

