ADDED : நவ 10, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : கல்லுாரிக்கு சென்ற தம்பியை காணவில்லை என அண்ணன் போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த மணலப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் முத்துக்குமார் 20. இவர், செஞ்சியில் உள்ள அரசு கலைக்கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 8-ம் தேதி காலை 12 மணியளவில் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை. எனவே அவரது அண்ணன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.