/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரோட்டோவேட்டரில் சிக்கி மெக்கானிக் பரிதாப பலி
/
ரோட்டோவேட்டரில் சிக்கி மெக்கானிக் பரிதாப பலி
ADDED : அக் 09, 2024 04:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே டிராக்டர் கலப்பையை சீரமைத்தபோது ரோட்டோவேட்டரில் சிக்கி மெக்கானிக் இறந்தார் .
விக்கிரவாண்டி அடுத்த தும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 52; டிராக்டர் மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் இரவு அதே ஊரைச் சேர்ந்த கோதண்டம் என்பவரது டிராக்டரில் இருந்த ரோட்டோவேட்டரை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ரோட்டாவேட்டர் இயங்கியது. அதில், ஜெயக்குமார் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கெடார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.