/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய டி.ஐ.ஜி., - எஸ்.பி., நாளை பொறுப்பேற்பு
/
புதிய டி.ஐ.ஜி., - எஸ்.பி., நாளை பொறுப்பேற்பு
ADDED : ஜன 09, 2024 07:22 AM

விழுப்புரம் : விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல், விழுப்புரம் எஸ்.பி., தீபக் சிவாஜ் ஆகியோர், நாளை (10ம் தேதி) பொறுப்பேற்க உள்ளனர்.
தமிழகத்தில், வரும் லோக்சபா தேர்தலையொட்டி, ஐ.பி.எஸ்., நிலையிலான காவல்துறை உயரதிகாரிகள் 47 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக இருந்த ஜியாவுல்ஹக், தஞ்சை சரக டி.ஜ.ஜி.,யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
சென்னை காவல் தலைமையக தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.,யாக பணிபுரிந்து வந்த திஷா மிட்டல், விழுப்புரம் டி.ஐ.ஜி.,யாக இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இதேபோல், விழுப்புரம் எஸ்.பி.,யாக இருந்த சசாங் சாய், சென்னை சி.ஐ.டி., கியூ பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதி காவல் துணை ஆணையராக பணிபுரிந்து வந்த தீபக் சிவாஜ், விழுப்புரம் எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இடம் மாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள், உடனுக்குடன் பணியிடங்களில் சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷா மிட்டல், விழுப்புரம் காவல் சரக அலுவலகத்திலும், எஸ்.பி., தீபக்சிவாஜ் எஸ்.பி., அலுவலகத்திலும் வரும் 10ம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.
கடந்து வந்த பாதை
எஸ்.பி., தீபக் சிவாஜ், 2018ம் பேட்ஜ் அதிகாரியாவார். முதலில், ஆவடி சிறப்பு போலீஸ் பட்டாலியனில் கமாண்டன்டாக சேர்ந்த இவர், 2022ம் ஆண்டில் செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து, விழுப்புரம் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஐ.ஜி., திஷா மிட்டல், 2010ம் பேட்ச் ஐ.பி.எஸ்., அதிகாரியாவார். சென்னையில் தொழில்நுட்ப பிரிவு டி.ஐ.ஜி.,யாக இருந்து, தற்போது விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக பொறுப்பேற்க உள்ளார்.